விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சினை உள்ளது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.30-க்கு மேல் வாங்கினால் அது மக்களைத்தான் பாதிக்கும். அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்பான, குதிரை பேரம் குறித்த கேள்விக்கு, 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'.
விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு கிலோ அரிசி ரூ.100-க்கு மேல் சென்றுள்ளது. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர், காவல் துறையை தனது கையில் வைத்துள்ளபோதும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சட்டப்பேரவையிலும் பேசியுள்ளோம். ஆனால் தீர்வு இல்லை" என்றார்.